மாகாண சபைத் தேர்தலையும் வெற்றி கொண்டு மக்களுக்குப் பணியாற்றவே விரும்புகிறோம். – டக்ளஸ் எம்.பி.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை மட்டுமல்லாது வடக்கு மாகாண சபை தேர்தலையும் வெற்றிகொண்டு எமது மக்களுக்கு பணியாற்றவே தாம் விரும்புவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், தாம் எந்த சந்தர்ப்பங்களிலும் சவால்களையும் நெருக்கடிகளையும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாது ஒவ்வொரு காலகட்டங்களிலும் எதிர்கொண்டு வருகின்ற போதிலும், இந்தத் தேர்தல் காலங்களில் தன் மீதும் தமது கட்சி மீதும் அவதூறானதும் பொய்த்தனமானதுமான பிரசாரங்களை திட்டமிட்ட வகையில் சக தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் நாம் பங்கெடுக்கும் சந்திப்புக்களில் மக்கள் பெருமளவில் திரண்டுவந்து எமக்கு ஆதரவை தருகின்றமையானது எமக்கு அவர்கள் மீது நம்பிக்கையையும் எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளதுடன், ஒரு மாற்றுத் தலைமையின் தேவையையும் உணர்த்தியுள்ளதையும் தம்மால் புரிந்து கொள்ள முடிவதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு