மியன்மார் அரசாங்கமும் அந்த நாட்டின் அரிசி சங்கமும் இணைந்து இலங்கைக்கு 300 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அரிசியை கையளிக்கும் நிகழ்வு மியன்மாரிலுள்ள கைத்தொழில் வலயத்தில் நேற்று இடம்பெற்றது. மியன்மார் வர்த்தக அமைச்சர் மற்றும் அதிகாரிகள், மியன்மாரிலுள்ள இலங்கைகான தூதுவரிடம் கையளித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.