ஒருவார கால அவகாசம் கோரப்பட்டுள்ளது

உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதை மேலும் ஒரு வாரத்திற்கு பிற்போடுமாறு தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த தினத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த குறித்த அமைச்சு எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டிருந்த போதிலும், உள்ளூராட்சி மன்றங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் மார்ச் மாதம் 2ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரால், மன்றங்கள் அமைக்கப்படும் திகதி அறிவிக்கப்பட வேண்டும் எனவும், அதன்படி, அவற்றை உரிய வகையில் செயற்படுத்த மேலும் ஒருவார காலம் எடுக்கும் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு