பிரதமருக்கு எதிராக நேர்த்திக்கடன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி நேர்த்திக்கடன் செலுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் ஆனமடுவ தொகுதி அமைப்பாளர் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இந்த நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாதவரையில், எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியாது. இதன் அடிப்படையில் விரைவில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர நேரும் என்றும், அவ்வாறு கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பலரும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் பாலித்த ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு