தொடர்ந்து தாமதமாகும் விமான சேவைகள்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சில விமானங்களின் சேவைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்ந்தும் நீடிக்கின்றது.

எவ்வாறாயினும், இந்த நிலைமை அநேகமாக கட்டுப்படுத்த கூடியதாய் இருக்குமென விமான நிலையப் பேச்சாளர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொச்சினில் பறவை ஒன்று விமானத்தில் மோதியமை உள்ளிட்ட காரணங்களால், இரண்டு விமானங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறினால் இந்தநிலை உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக விமானப் பயணத்துக்காக பதிவு செய்துள்ளவர்கள், முன்கூட்டியே தங்களைத் தொடர்புகொண்டு சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவுறுத்தியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு