16 நாடுகளின் பங்கேற்றலுடன் கடற்பாதுகாப்புப் பயிற்சி

இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளின் பங்குபற்றுதலுடன், இந்தியா மாபெரும் கடற்பாதுகாப்பு பயிற்சி நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

அந்தமான் – நிக்கோபார் தீவுகளின் கடற்பரப்பில் நடைபெறவுள்ள இந்த பயிற்சி நடவடிக்கைகளுக்கு மிலான் என்று பெயரிடப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் எட்டு நாட்களுக்கு இந்த பயிற்சிகள் நடைபெறவுள்ளதாக இந்திய கடற்படையின் பேச்சாளர் டீ.கே.ஷர்மா தெரிவித்துள்ளதுடன், கடல் ஒழுங்குகளை பேணுவது தொடர்பான கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பகிர்ந்துக் கொள்ளல், பிராந்திய பாதுகாப்பு, சட்டமுறையற்ற செயற்பாடுகளை தடுத்தல் என்பன இந்த பயிற்சிகளின் நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதில், இலங்கை, அவுஸ்திரேலியா, மாலைதீவு, மலேஷியா, மொரீசியஸ், மியன்மார், நியூஸிலாந்து, ஓமன், வியட்நாம், தாய்லாந்து, தன்சானியா, சிங்கப்பூர், பங்களாதேஷ், இந்தோனேசியா, கென்யா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு