நபரொருவர் அடித்துக் கொலை

பெல்மடுல்ல, குட்டாபிட்டிய பகுதியில் பொல்லால் அடித்து ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காணி பிரச்சினை தொடர்பில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் உச்சமடைய ஒருவர் மற்றவரை பொல்லால் அடித்து கொலை செய்து பின்னர் அப்பகுதியை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெல்மடுல்ல, குட்டாபிட்டிய பகுதியை சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்ய பெல்மடுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு