இரு புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களான எஸ்.எம்.எ.நியாஸ் மற்றும் சபாரட்ணம் குகதாஸ் ஆகியோர் இன்று (27) பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை தொடர்ந்து முதன்முதலாக அவைக்கு வருகைதந்திருந்தனர்.

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற 117வது அமர்வு ஆரம்பமாகிய போது, இரு உறுப்பினர்களும் அவைத் தலைவரினால் சபைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

வட மாகாண சபையின் உறுப்பினராக இம்மானுவேல் ஆர்னோல்டிற்குப் பதிலாக ரெலோ கட்சியின் உறுப்பினராக சபாரட்ணம் குகதாஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் றயிஸ் ராஜினமா செய்து கொண்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிதாக எஸ்.எம்.எ.நியாஸ் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இருவரும் தமது கன்னியுரையினை சபையில் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு