அர்ஜுன் மகேந்திரனை ஏன் அழைத்துவர முடியவில்லை? டலஸ் கேள்வி

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை எதிர்வரும் 24 மணித்தியாலத்தினுள் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கூட்டு எதிரணியினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார். நாட்டின் ஜனாதிபதி அல்லது குறைந்த பட்சம் வெளிவிவகார அமைச்சர், சிங்கப்பூர் அரசாங்கத்திடம் அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை முன்வைப்பதன் ஊடாக 24 மணி நேரத்துக்குள் அவரை நாட்டுக்கு அழைத்துவர முடியுமென டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிகேடியரை 24 மணி நேரத்துக்குள் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் நாட்டிற்கு அழைத்துவர முடியும் என்றால், மத்திய வங்கியின் முறிமோசடியில் பிரதான சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அர்ஜுன் மகேந்திரனை ஏன் அழைத்துவர முடியாதென கேள்வி எழுப்பியுள்ளதுடன், இந்த விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு