இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் திட்டம் தொடர்பில் ஆராய்வு

தேசிய தொழில் பயிற்சி தகமையை பூர்த்தி செய்த இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு பிணையாளர் இன்றி கடன் வழங்க முடியுமா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக வங்கிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிணையாளர்கள் இன்மையினால் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கவோ அவற்றை முன்னெடுத்துச் செல்லவோ முடியாத நிலை காணப்படுவதாகவும், இதனை நிவர்த்திக்கும் வகையிலேயே திட்டங்கள் வகுக்கப்படவுள்ளதுடன், இளம் முயற்சியாளர்களுக்கு தேவையான இயந்திரங்களையும் உபகரணங்களையும் வழங்குவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆராயுமாறும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு