முல்லைத்தீவு, முள்ளியவளை, கிச்சிலாபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றதாக முள்ளியவளை பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.