பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கத் தயார்

பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அணிகளும், ஐக்கிய தேசியக் கட்சியும் திருடுவதற்காகவே ஆட்சிக்கு வருகின்றார்களே தவிர மக்கள் சேவைக்காக வரவில்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவதற்காக மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூடிமறைத்ததாகவும், தமக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நேரடி தலையீட்டில் நிறுத்தியதாகவும் பிமல் ரத்நாயக்க இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு