இந்தியாவின் பாரிய கடற்பயிற்சி நடவடிக்கைகளில் கலந்துகொள்ள மாலைதீவு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை, இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளின் பங்குபற்றுதலுடன், அந்தமான் கடற்பரப்பில் மிலான் என்ற ஆறு நாள் பயிற்சிகள் நடைபெறவுள்ள நிலையில், இதில் கலந்துகொள்ளுமாறு மாலைதீவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதும், அதனை அந்நாட்டு அரசாங்கம் மறுத்திருப்பதாகவும், உhயி காரணத்தையும் வெளிப்படுத்தவில்லை எனவும் இந்திய கடற்படைத் தளபதி சுனில் லம்பா தெரிவித்துள்ளார்.
மாலைதீவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையை அடுத்து அமுலாக்கப்பட்ட அவசரகால சட்டத்தை நீக்குமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகின்றபோதும், அந்தச் சட்டத்தை மாலைதீவு நீடித்துள்ளதுடன், சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களுக்கு மாலைதீவு இடமளித்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், சீனாவின் கப்பல்கள் மாலைதீவுக்கு அருகில் பயணித்தமையானது, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இல்லை எனவும் இந்திய கடற்படைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.