பிரதமரின் பொருளாதார மேலாண்மைக் குழுவை இரத்துச் செய்ய ஜனாதிபதி யோசனை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார மேலாண்மைக் குழுவை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அது தொடர்பில் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் குறித்த பொருளாதார மேலாண்மைக் குழு உரிய வகையில் செயற்படவில்லையென ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவையேற்பட்டால் அமைச்சரவையின் ஊடாக குழுவொன்றை நியமித்து அதனூடாக குறித்த யோசனையை செயற்படுத்த முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு