தற்போதைய சூழலை நாட்டு மக்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் – முன்னாள் இராணுவத் தளபதி

தற்பேதைய காலகட்டத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து அனைத்து மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு சவாலாக அமைந்த இடங்கள் நாட்டுக்கு தொடர்ந்து சவாலான இடமாக அமையாது என்ற நிலை தோன்றும்வரை அவை தொடர்பில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமானது. வட்டுவாகல் மற்றும் பலாலி என்பன அவ்வாறான இடங்களாகும்.

யுத்தத்தின் போது வட்டுவாகல் போன்ற பகுதிகள் பல உயிர்கள் காவுகொடுக்கப்பட்டும் பல ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தும் மீட்கப்பட்ட பகுதிகள் என்றும், அவ்வாறான இடங்களில் மீண்டும் பாரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய சிவாஜிலிங்கம் போன்றவர்களை ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், ஓய்வூதியத்திற்காக பல நாட்கள் போராட்டம் நடத்திய உடல் ஊனமுற்ற இராணுவ வீரர்களை நேரில் சென்று சந்திக்காதது இராணுவ வீரர் என்றவகையில் வேதனைக்குரியதென கமல் குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு