சைட்டம் மாணவர்களின் கல்வித் தகைமையை பரிசீலிக்க வேண்டும்

மாலபே சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்ளும் போது அவர்களின் கல்வித் தகைமை கட்டாயம் பரிசீலனை செய்யப்பட வேண்டும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அரச மருத்துர அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், கல்வித் தகைமைகளை பரிசீலிக்காது அனைவரும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமென அண்மைக் காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்ற கருத்துக்களால், சைட்டம் மாணவர்களின் கல்வித் தகைமைகள் குறித்து பெரும் சந்தேகங்கள் எழுவதாகவும், எனவே, அவ்வாறான ஒரு நிகழ்விற்கு இடமளிக்க முடியாதென மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு