வித்தியா கொலை வழக்கு விவகாரம்: விசாரணைக் கோவைகள் பாரப்படுத்தப்பட்டன

வித்தியா படுகொலையோடு தொடர்புபட்ட சுவிஸ்குமார் தப்பித்து சென்ற வழக்கு விசாரனையில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டு விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு மன்றுக்கு அறிக்கையிட்டுள்ளது.

குறித்த வழக்கானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு பிரிவு இவ் அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

இதனையடுத்து, குறித்த வழக்கில் முதலாவது சந்தேகநபரான லலித் ஜெயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவில் ஒவ்வொரு மாதமும் கையொப்பமிட வேண்டிய நிபந்தனையை தளர்த்துமாறு அவர் தரப்பு சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை ஏற்ற மன்றானது அந்நிபந்தனையை தளர்த்தி இனிமேல் லலித் ஜெயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவில் கையொப்பமிட தேவையில்லையென பணிப்புரை பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிவான் றியால் உத்தரவிட்டார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு