சீன வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு செலவீனம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை எந்த நாட்டையும் பாதிக்காதென சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் ஷங் யெசூய் தெரிவித்துள்ளதுடன், இந்த பாதுகாப்பு செலவீனம் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வந்துள்ளதாகவும், அது ஒரு வழமையான நிர்வாக நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.
சீனா பாதுகாப்பிற்காக செலவிடும் தொகையினை அமெரிக்க அவதானித்து வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த பாதுகாப்பு செலவீன அதிகரிப்பு, யுத்த விமானங்களை தாக்கும் கப்பல்கள் மற்றும் செய்மதி மூலம் செலுத்தப்படும் ஏவுகணை போன்றவற்றின் அபிவிருத்திகாக செலவிடப்படுகிறதா? என்பது குறித்தே அமெரிக்கா அதிக கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிடப்படுகிறது.