பப்புவா தீவில் நிலநடுக்கம்

பப்புவா நியூகினியா தீவில் 6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் போர்கெரா நகரிலிருந்து சுமார் 112 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் நேற்று மாலை ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்புவா நியூகினியா தீவில் கடந்த வாரம் இடம்பெற்ற 7.2 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வில் 31 பேர் வரையில் பலியானமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு