கொடிகாமம் தாக்குதல் சம்பவம்: தொடர் விசாரணை முன்னெடுப்பு

யாழ். கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை இடம்பெறுவதாக கொடிகாமம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் தங்கி இருந்த ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் மீது நேற்று இரவு வாள்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். முகத்தை மறைத்துக் கொண்டு வீட்டினுள் புகுந்த நான்கு பேர் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு