விவசாயிகளுக்கு இலவச உற்பத்தி காப்புறுதி?

இந்த முறை சிறுபோகத்தில் இருந்து, விவசாயிகளுக்கு உற்பத்தி காப்புறுதி இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படுமென விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளைப் பாதுகாத்து, அவர்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படும் நிலையில், நாட்டில் விவசாயச் சங்கங்களை உள்ளடக்கிய வகையில், 2500 பேரைக் கொண்ட விவசாயப் பிரதிநிதி வலைப்பின்னல் தற்போது அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், காப்புறுதி நடைமுறை குறித்து, விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், தற்போது வழங்கப்பட்டுள்ள உற்பத்திகளுக்கு மேலதிகமாக, பாசிப்பயறு, எள்ளு, கௌபி உள்ளிட்ட ஏனைய உற்பத்திகளுக்கும் காப்புறுதித் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு