டக்ளஸின் கொள்கைவழியை ஏற்றார் விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு இணைவது தொடர்பில் இந்தியாவின் தார்மீகக் கடமை குறித்த தமது வலியுறுத்தல் என்பது, அடி பணிவுகள் அல்லவென வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தில் தூதராக கடமையாற்றி இடமாற்றலாகி செல்லும் எ.நடராஜனுக்கு வட மாகாண சபையில் நேற்றைய தினம் பிரியாவிடை நிகழ்வு ஏற்படு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சீ.வி விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்டைய நாடான இந்தியவுடன் நெருங்கிய உறவுகளைப்பேணி வருவது யதார்த்த பூர்வமானது எனவும், அதற்கு உள்ளர்த்தங்கள் கற்பிக்கப்படுவது நகைப்பிற்குரியது எனவும், தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையினை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் இந்தியாவுடனான நட்பு, இதயசுத்தியுடனான பரஸ்பர அரசியல் இராஜதந்திர நடவடிக்கைகள் என்பன அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் பாரிய அழிவினை சந்தித்து, பல அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து வரும் மக்கள், தமது வரலாற்று ரீதியான அடையாளங்கள், உரிமைகள் என்பவற்றை பாதுகாக்க இந்தியா காத்திரமான வகிபாகத்தை மேற்கொள்ளுமென தாம் நம்புவதாகவும் சீ.வி விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு