உயர்மட்டக் குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியை முழு மறுசீரமைக்கும் பொருட்டான யோசனைகளைப் பெற்றுக்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படுகிறது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தலைமையிலான இந்த குழுவில் அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, அகிலவிராஜ் காரியவசம் மற்றும் அஜித் பீ பெரேரா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியை முழுமையான மறுசீரமைப்பதற்கான யோசனைகளை முன்வைக்கும் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஒருவாரத்திற்கு முன்னர் இந்த குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு