புலமைப் பரிசில் சலுகைகளில் மறுப்பு இல்லை

மஹபொல அல்லது ஏனைய புலமைப்பரிசில் நிதியுதவிக்கு உரித்தான எந்தவொரு மாணவருக்கும் அந்த சலுகை மறுக்கப்படமாட்டாது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டீ சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்த பீடங்களிலுள்ள மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு இந்த மாதத்தில் வழங்கப்படும் என்பதுடன், கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாத காலப்பகுதிக்குள் ஏனைய பீடங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு