மத முறுகலை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத முறுகலை ஏற்படுத்தும் எந்தவொரு தரப்பினருக்கு எதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குற்றம் புரிபவர்கள் மற்றும் அமைதி, சமாதானத்தை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக உறுதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் பின்நிற்க போவதில்லையென அரசாங்கம் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்பு சபையின் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்றதுடன், சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்டும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இதன்போது ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வணக்க ஸ்தலங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் குடியிருப்புகள் என்பவற்றுக்கு சேதம் ஏற்படுத்திய அம்பாறை மற்றும் திகன பகுதி சம்பவங்களை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் அரசாங்கம் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு