கல்விசாரா பணியாளர்களுக்கு அழைப்பு

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா பணியாளர்கள் அனைவரும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.

தங்களது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாக சகல பணியாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

05 கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 07 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் போராட்டத்திற்கு இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கப் பெறவில்லை எனவும், இதனிடையே, பல்கலைக்கழக கல்விசார பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக பல்கலைக்கழக நிறைவேற்று தர அதிகாரிகளின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு