ஆணையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்

காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களது எண்ணிக்கையை மேலும் இரண்டால் அதிகரிக்க வேண்டுமென வடமாகாண சபை கோரியுள்ளது.

வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களது எண்ணிக்கையை வரையறை செய்யும் சட்டமூலம் ஏலவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த கோரிக்கைக்கான சாத்தியப்பாடுகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லாத பட்சத்தில், வரையறைக்கப்பட்ட 07 ஆணையாளர்களுக்குள், வடமாகாணத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் ஒருவரை உள்ளடக்க வேண்டும் என்றும் சீ.வி.கே.சிவஞானம் கேட்டுக் கொண்டார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு