இராணுவத்தைக் குறைக்க சீனா தீர்மானம்

உலகில் பாரிய இராணுவமான சீன மக்கள் விடுதலை இராணுவத்தில் இருந்து 03 இலட்சம் படையினரை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான திட்டத்தை பிரதமர் லீ கெகிகாங் அந்தநாட்டு தேசிய மக்கள் காங்கிஸில் நேற்று முன்வைத்துள்ளதைத் தொடர்ந்து, தற்போது 23 லட்சமான உள்ள மக்கள் சீன விடுதலை இராணுவத்தை 20 லட்சமாக குறைக்கவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நவீன இராணுவ வெற்றிகளைப் பெறக்கூடிய வலிமையான இராணுவமாக உருவாக்க முடியுமென நம்புவதாகவும் சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

1980ஆம் ஆண்டுகளில் 45 இலட்சமாக இருந்த சீன மக்கள் விடுதலை இராணுவம், 1985ஆம் ஆண்டு 30 இலட்சமாக குறைக்கப்பட்டு அதுவும் பின்னர் 23 இலட்சமாக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு