இலங்கையர்கள் தொடர்பான தீர்ப்பு 12ஆம் திகதி

டுபாயில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த ஐந்து பேர் தொடர்பான தீர்ப்பை, டுபாய் குற்றவியல் நீதிமன்றம் இந்த மாதம் 12ஆம் திகதி வழங்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் ஜுலை மாதம் 11ஆம் திகதி குறித்த ஐந்து இலங்கையர்களும், அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரது இல்லத்திற்குள் பிரவேசித்து பெறுமதியான பொருட்களையும், பணத்தையும் கொள்ளையிட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சார்ஜாவில் வைத்து கடந்த ஆண்டு ஜுலை 17ஆம் திகதி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தாங்களே இந்த கொள்ளையைப் புரிந்தமையை ஒப்புக் கொண்டதுடன், மேலும் பல வீடுகளில் கொள்ளையிட்டிருப்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவர்களது வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஆயுதங்களுடன் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டை மாத்திரம் அவர்கள் நிராகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு