டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் இதைத் தான் இன்று சுட்டிக்காட்டினார்

நாட்டில் கடந்த 30 வருட கால யுத்தத்தம் நிறைவுக்கு பின்னரான இக்காலப்பகுதியானது இனங்களுக்கு இடையில் சந்தேகங்களை அகற்றி, பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்கின்ற கால கட்டமாக மாற்றப்பட்டிருத்தல் வேண்டும். அதனை செய்வதற்கு தவறிய ஒரு நிலையிலேயே கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள திகன பகுதியில் ஏற்பட்டுள்ள அசம்பாவித சம்பவங்கள் எடுத்தியம்புகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள திகன பகுதியில் ஏற்பட்டுள்ள அசம்பாவித சம்பவங்கள் தொடர்பில் நாடாளுன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

நாட்டில் பொறுப்பு கூற வேண்டிய அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக அரசியல்வாதிகள், ஊடகங்கள்ஈ சமூக மற்றும் மதத் தலைவர்கள் மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதே நேரம், அனைத்து இன மக்களும் புரிந்துணர்வுகளோடு சில விட்டுக் கொடுப்புகளுடன் நடந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேற்படி சம்பவத்திற்கு மூல காரணமாக கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் காரணமாக  எம். ஜி. குமாரசிங்க என்பவர் உயிரிழந்துள்ளார். அன்னாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது மறைவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள அனைவருடனும் எனது துயரங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்களுக்கும் எனது வேதனையை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் குமாரசிங்க அவர்களது இழப்பு தொடர்பிலும், பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுது சொத்து இழப்புகள் தொடர்பிலும் இந்த அரசு விரைந்து இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் – என்று தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு