பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைவாக நியமிக்கப்பட்ட மூன்று விஷேட பொலிஸ் குழுக்கள் கண்டி நகருக்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூன்று பேரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூன்று பேரும் இந்த விஷேட பொலிஸ் குழுக்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.