தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு: கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றன.

குறித்த நபரின் உறவினர்கள் கனடாவில் வாழ்வதாகவும், கிளிநொச்சி செல்வாநகரில் அவரது காணியை பார்வையிட அடிக்கடி செல்வதாகவும், அவ்வாறு சில தினங்களிற்கு முன் சென்ற போதே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், உயிரிழந்த நபரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு