இலங்கை அரசின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்த ஐ.நா உயர்ஸ்தானிகர்

இலங்கை அரசாங்கம் நிலைமாறுகால நீதிவழங்கல் செயற்பாடுகளின் அமுலாக்கத்தை விரைவுபடுத்த வேண்டியது அவசியமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் ராட் அல் ஹ{சைன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறுதல்கள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் அதிருப்தியளிப்பதாகவும், இந்த விடயத்தை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதமே, அண்மைய நாட்களில் இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களுக்கு காரணமாக அமைவதாகவும், இவ்வாறான சம்பவங்கள் வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமானது நிலைமாறுகால நீதிவழங்கல் பொறிமுறை அமுலாக்கத்தில் உரிய வகையில் செயற்படவில்லை என்றால், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், இலங்கை தொடர்பில் சர்வதேச நீதிப்பொறிமுறையை பயன்படுத்த ஊக்கமளிப்பதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு