இலங்கை அரசாங்கத்தின் மீதான சீனாவின் நம்பிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இயல்பற்ற சூழ்நிலையை கட்டுப்படுத்தும் இயலுமை இலங்கை அரசாங்கத்துக்கு இருப்பதாக சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற சில சம்பவங்களைத் தொடர்ந்து இலங்கையில், அவசரகால சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளமை குறித்து அறிந்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் இருக்கின்ற போதும், தற்போதைய சூழ்நிலையை கையாளவும், சமுக ஸ்திரத்தன்மையும், தேசிய ஒற்றுமையையும் கையாளும் திறன் இலங்கையிடம் இருப்பதாக சீனா நம்புவதாகவும் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் போச்சளர் கெங் சோங் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்து பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு