கால அவகாசம் நிறைவு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு, வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

கொழும்பு, கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ணவினால், அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக இது தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தல், இன்னும் அவரிடம் கையளிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை எனவும், அர்ஜுன் மகேந்திரன், சிங்கப்பூரில் இருக்கின்றார் எனக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, சர்வதேச பொதிச் சேவை ஊடாகவும், அதிவேக அஞ்சல் ஊடாகவும் அவருக்கான அறிவித்தலை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சிங்கப்பூரில் அவர் வசிக்கும் இல்லம் பூட்டப்பட்டுள்ளதாக பின்னர் தெரிவிக்கப்பட்ட போதிலும், குறித்த அறிவித்தல் தொடர்பில், அர்ஜுன் மகேந்திரனின் தனிப்பட்ட தொலைபேசிக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தகவல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு