பொய் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்

கண்டி மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களின் நிலைமை அமைதியாக உள்ளதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பொய்யான பிரசாரங்களை நம்புவதை தவிர்த்து, பொறுப்புடன் செயலாற்ற வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பில் நேற்று வெளியிட்ட விஷேட அறிவித்தலில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டையை அண்டிய பகுதியில் சில வர்த்தக நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ள அதேவேளை, அம்பத்தென்ன பகுதியில் கலகம் விளைக்கும் வகையில் செயற்பட்ட தரப்பினர் வைத்திருந்து கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது.

இந்த நிலையில், மதத் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றபோதும், அவ்வாறு எந்தச் சம்பவமும் இடம்பெறவில்லை எனவும், குறித்த பகுதிக்கு மேலதிக பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில், நாட்டின் ஏனைய பகுதிகளின் நிலைமை அமைதியக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போதைய குழப்ப நிலைமையை கட்டுப்படுத்தி, பாதுகாப்பான சூழலை உருவாக்க சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்க வேண்டுமென பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு