யுத்த பாதிப்புகளுக்குள்ளானவர்களுக்கு நஷ்டஈடு

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான அலுவலகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதற்கான சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அலுவலகத்தின் ஊடக, யுத்தம், இனக்கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பு படையினரின் குடும்பங்களென அனைவரும் நஷ்டஈட்டுக்கு விண்ணப்பிக்க முடியுமென தேசிய கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை முன்வைத்தார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு