ஒரு வருடத்தைக் கடந்தது உறவுகளின் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் 8ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது.

கடந்த காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு யுத்த காலப்பகுதியில் யுத்தப்பிரதேசங்களில் விஷேடமாக யுத்தம் முடிவடைந்து இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமது பிள்ளைகள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது என்ற முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடருமென மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அரசாங்கம் தமக்கு எந்த தீர்வையும் தராது என்பதை 03 தடவையாக தம்மை சந்தித்த ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலையில் சர்வதேச விசாரணையே தமக்கான தீர்வாக அமையும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மதகுருமார் சிவில் சமூக பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் வடகிழக்கின் 08 மாவட்டங்களில் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு மக்களுக்கான தீர்வை வலியுறுத்தி போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு