கடுவல பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று 2.6 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் பெறுமதி 30 மில்லியன் ரூபாய் எனவும், இவ்வருடத்தில் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான ஹெரோயின் போதைப் பொருள் இதுவெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.