நாளை முதல் நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான காலநிலையை எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுடன் களுத்துறை காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.