கண்டி சம்பவம்: 10 பேர் கைது

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ள அதேவேளை, இன்று மாலை 6.00 மணியிலிருந்து நாளை காலை 6.00 மணிவரை கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு