53 லட்சம் பெண்கள் பணிப்புறக்கணிப்பு

ஸ்பெய்னில் சுமார் 53 லட்சம் பெண்கள் இணைந்து பாரிய பணிப்புறக்கணிப்பை நேற்று முன்னெடுத்துள்ளனர்.

பால்நிலை சமத்துவம் மற்றும் பாலியல் பாகுபாடுகள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

24 மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்பட்ட இந்தப் பணிப்புறக்கணிப்புக்கு 10 தொழிற்சங்கத்தினரும், ஸ்பெய்னின் சில உயர்மட்ட அரசியல்வாதிகளும் ஆதரவளித்துள்ள நிலையில், நாங்கள் நிறுத்தினால், உலகம் நிறுத்தப்படும் என்ற கோஷத்தை எழுப்பியவாறு அவர்கள் வீதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு