99 பேர் ரயில் விபத்துகளில் பலி

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ரயில் விபத்துக்களில் 99 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த மரணங்கள் ரயில் கடவைகளில் கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல், ரயில் மிதிபலகையில் பயணித்தல், தொலைபேசியில் பேசிக் கொண்டு ரயில் பாதையில் நடத்தல், தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்ளல், ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்து கீழே விழுதல் போன்ற காரணங்களால் சம்பவித்துள்ளன.

இதேவேளை, 2017ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 517 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு