சிறு குழுக்கள் மேற்கொள்ளும் முட்டாள்தனமான செயல் காரணமாக சர்வதேசம் போன்று சமூக மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகவும் பாரதூரமானதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் பிரதமர் குறிப்பிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருடன் மேலும் 09 பேர் கைதாகி இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.