இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயண எச்சரிக்கை

கண்டியில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு பயணம் செய்யும் தங்களது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.

இலங்கைக்கு பயணிக்கும் மற்றும் இலங்கையில் தங்கியுள்ள தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள், தங்களது பாதுகாப்பு தொடர்பில் மேலதிக அவதானத்தை செலுத்துமாறு தென்கொரிய வெளிவிவகார அமைச்சு இந்த கோரிக்கையை விடுத்துள்ளதுடன், வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்ட கண்டி பகுதிக்கு செல்வதானால் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயக் செய்யும் சிங்கபூர் பிரஜைகள், முக்கிய காரணங்களுக்காக அன்றி கண்டிக்கு செல்ல வேண்டாமென சிங்கபூர் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, துருக்கி போன்ற நாடுகள் தங்களது நாட்டின் பிரஜைகளை இலங்கை வருகையில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு