கண்டி குழப்பநிலைக்கு விரைவில் சட்ட நடவடிக்கை

கண்டி குழப்பநிலை தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிராக இயன்றளவு விரைவில் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், எதிர்வரும் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சாரதி ஒருவருக்கு மூவர் மேற்கொண்ட தாக்குதலிலேயே இந்த பிரச்சினை ஆரம்பமானதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடருமாறு தாம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

30 வருடங்கள் இடம்பெற்ற யுத்தத்தினால், நாட்டில் பலருக்கு மத்தியில் இணக்கப்பாடு ஏற்படாது போனதுடன், சமூக வலைத்தளங்களிலும் இன வன்முறைகளை தூண்டும் வகையிலான பல்வேறு பதிவுகள் இடப்பட்டு வந்ததாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு