அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கவும்

கடந்த தினங்களில் கண்டியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பாக இதுவரை முறைப்பாடு செய்யவில்லையென்றால் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு பொலிஸ் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, கண்டியில் மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பமாகுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளதுடன், கண்டியில் ஏற்பட்ட குழப்பநிலைகள் காரணமாக கடந்த 7ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டது. கண்டியின் சில பகுதிகளில் ஏற்பட்ட குழப்பநிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பொலிசார் மற்றும் பாதுகாப்பு தரப்பின் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் நாடு முழுவதிலும் 230 பேர் வரையில் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றுள் கண்டிக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு குழப்ப நிலைகளை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக பாரபட்சமின்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சட்டம் மன்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு