பண மோசடி விவகாரம்: நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் அரசாங்க வங்கியொன்றுக்கு கொண்டுவரப்பட்ட 11,074,000 ரூபாய் பணத்தில் 8,020,000 ரூபாய் பணம் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் 04 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி அநுராதபுரம் பிரதேச வங்கியொன்றில் இருந்து யாழ்ப்பாணத்திலுள்ள வங்கியொன்றுக்கு இந்த பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்கள் பணத்தை கொண்டு செல்லும் வழியில், தேநீர் அருந்துவதற்காக இடையில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அவர்கள் தேநீர் அருந்திய பின்னர் மீண்டும் வாகனத்திற்கு வந்த வேளை அங்கிருந்த பணம் அடங்கிய பைகளில் இரண்டு பைகள் காணாமல் போயிருந்ததாக பொலிசாரிடம் வாக்குமூலமளித்திருந்தனர்.

அந்த பைகளை இனந்தெரியாதாவர்கள் கொள்ளையிட்டு சென்றிருக்கலாமென அவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய பணத்தை கொண்டு சென்ற 56, 43, 24 மற்றும் 23 வயதான சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு