ஏற்றுமதியை அதிகரிக்கத் தீர்மானம்

இந்த வருடத்தில் ஏற்றுமதி நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

வர்த்தக விற்பனை பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி 12 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சபையின் தலைவர் இந்திரா மல்வத்த தெரிவித்துள்ளதுடன், இதற்கு அமைய இந்த வருடத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி இலக்கான 16 ஆயிரத்து 631 அமெரிக்க டொலர் ஏற்றுமதியினை இலகுவாக எட்ட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய ஏற்றுமதி வினைத்திறனுக்கு அமைவான நீண்ட தூர கண்ணோட்டத்தின் மூலம் இலங்கை பொருட்களின் ஏற்றுமதியினை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு