கடந்த செவ்வாய்க்கிழமை அவசர காலம் பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுவதாக பங்குச் சந்தை ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும், சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை பெறுவதில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை எனவும், பங்குச் சந்தை ஆலோசகர்களின் கருத்தினை மறுதளித்துள்ள பங்குச் சந்தை தரகர்கள், குறுகிய கால பிரச்சினைகள், வெளிநாட்டு நீண்ட கால முதலீட்டாளர்களை பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், எதிர்வரும் வாரத்தில் குறிப்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை அளவில் பரிவர்தனை நடவடிக்கைகள் வழமைக்கு திரும்புமெனத் தெரிவிக்கப்படுகிறது.